2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில்  திமுக வேட்பாளருக்கு ஆதரவாக  நடிகர் வாசு விக்ரம் பிரசாரம்

விருதுநகர் மக்களவை உறுப்பினர் ரத்னவேலுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே நடிகர் வாசுவிக்ரம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார். 

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை உறுப்பினர் ரத்னவேலுக்கு ஆதரவாக பொதுமக்களிடையே நடிகர் வாசுவிக்ரம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார். 

விருதுநகர் மக்களவை வேட்பாளருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இதில், காந்திபுரம் தெருவில் நடிகர் வாசுவிக்ரம் பிரசாரம் செய்து பேசியதாவது: அதிமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் அமைச்சர்களை அடிக்கடி மாற்றியதுதான் சாதனை ஆகும். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், பஸ், கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்டவைகளை உயர்த்தியுள்ளார். இதிலும், பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்துவது என்பது தமிழகத்தில் தான் நடக்கிறது.

இங்கு போட்டியிடும் வைகோ அண்ணன் குடித்து விட்டு வருகிறவர்கள் என் வாகனத்தில் ஏறக்கூடாது என்கிறார். ஆனால், குடித்து விட்டு பிரசாரத்திற்கு வரும்  விஜயகாந்த் உடன் வாகனத்தில் வருகிறார். வைகோ போல் சிறந்த பேச்சாளர் இல்லை. அவர் திமுகவில் இருக்கும் போது காட்டுயானையாக வலம் வந்தார்.  பின்னர் அதிமுகவிற்கு போய் சர்க்கஸ் யானையாக ஆகிவிட்டார். தற்போது, கோயி்ல் யானையாக மாறும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் யார், யாருக்கு எந்த இடம் என்பது தெரிந்து விடும். அதனால், திமுக வேட்பாளர் ரத்னவேலுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என நடிகர் வாசுவிக்ரம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இதேபோல், விருதுநகர் பழைய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டார். உடன் நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.